2025 மே 24, சனிக்கிழமை

லிந்துலையில் மினி சூறாவளி

Kogilavani   / 2017 மார்ச் 09 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜா, எஸ்.செல்வரஜா, எஸ்.கணேசன்  

லிந்துலை, கெளலினா மற்றும் ஹென்போல்ட் ஆகியப் பகுதிகளில், நேற்று பிற்பகல் வீசிய மினி சூறாவளியினால், சுமார் 30 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன், 150 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதேவேளை, 15 இற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக, தெரியவருகிறது.

பாதிப்படைந்த வீடுகளில், பதுளை மாவட்ட எம்.பி ஒருவரின் வீடும் உள்ளடங்குதவதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக வீசிய மினி சூறாவளியினால், அப்பகுதியில் மின் துண்டிப்பும் ஏற்பட்டது.

மலையகத்தின் பல பகுதிகளிலும் பெய்துவரும் மழை தொடர்ந்தால், மண்சரிவு ஏற்படக்கூடும் என்று, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.   

கடந்த சில நாட்களாக, ஹல்துமுல்லை பகுதியில் பெய்யும் மழையினால், ஊவாதென்ன பகுதியில், வர்த்தக நிலையமொன்றின் மீது, ​செவ்வாய்க்கிழமையன்று மண்மேடு சரிந்து விழுந்ததில், அவ்வர்த்தக நிலையம், முற்றுமுழுதாக மண்ணுள் புதையுண்டுள்ளது.  

மேற்படி வர்த்தக நிலையம் அமைந்துள்ள பகுதியில், மண்சரிவு அபாயம் இருந்ததால், வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டிருந்தனர். இதனால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை, கொழும்பு-பதுளை பிரதான வீதியிலும், மண்மேடு சரிந்துள்ளமையால், அவ்வீதி வழியான போக்குவரத்து, பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  மேலும் தலவாக்கலை, லோகி தோட்டம், மிடில்டன் பிரிவின் புதிய வீடமைப்புத் திட்ட குடியிருப்பு பகுதியில், செவ்வாய்க்கிழமை மாலை, மண்மேடு சரிந்து விழுந்ததில், குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வனர்த்தத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், வீட்டின் பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X