2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரவேற்பு…

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டுக்கான 1ஆம் தர மாணவர் அனுமதியும் வரவேற்பு விழாவும், கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் இன்று (15) நடைபெற்றன.

புதிய மாணவர்கள், மாலை அணிவித்து இனிப்பு வழங்கி இதன்போது வரவேற்கப்பட்டனர்.

 

திருகோணமலை: ஒலுமுதீன்  கியாஸ்

திருகோணமாலை, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில், அதிபர் என்.எஸ். அமீன் வாரி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.இஸட். எம். நளீம், நகரசபை செயலாளர் என்.எம். நெளபீஸ் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலயத்தில், அதிபர் எம்.ஐ.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.இஸ்ஸதீன், காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன், ஆரம்பக்கல்வி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அம்பாறை: எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் குமர வித்தியாலயத்தில், அதிபர் இ.இரத்தினகுமார் தலைமையில் இடம்பெற்ற ​வரவேற்பு நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.பிள்ளநாயகம் கலந்துகொண்டார்.

முள்ளிப்பொத்தானை - எம் எஸ் அப்துல் ஹலீம்

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/பாத்திமா பாலிகா வித்தியாலய நிகழ்வு, அதிபர் ஏ.ஆர்.எம் சாதீகீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிண்ணியா வலயகல்வி அலுவலகத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஆலோசகரும் பாத்திமா பாலிகா வித்தியாலத்தின் இணைப்பாளருமான எம்.ஐ.எம் நஸார் பிரதம அதிதீயாக கலந்து கொண்டார்.

கிண்ணியா - ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஆர்.நஸீம் தலைமையில்  நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X