Editorial / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் டிட்வா சூறாவளியை தொடர்ந்து தடைப்பட்டிருந்த உள்ளூர் சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்கு திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகின்றது
மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் உன்னிச்சை குளப் பிரதேசம் தற்போது சுற்றுலா பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சைக் குளம் கடும் மழை காரணமாக நிரம்பி வான்கதவுகள் திறந்து விடப்பட்டதால் நீர் பெருக்கெடுப்பினால் குறித்த பிரதேசத்தில் அதிக அளவில் வெள்ளநீர் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை தடை பட்டிருந்தது
தற்போது காலநிலை சீரடைந்து சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் உன்னிச்சை குளத்தின் அழகை ரசிப்பதற்காகவும் அதில் குளித்து மகிழ்வதற்காகவும் வருகை தருகின்றனர்
வெள்ள அனர்த்த காலத்தில் திறக்கப்பட்ட வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்திரப்ப திறந்திருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரீ.எல் ஜவ்பர்கான்




4 minute ago
11 minute ago
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
14 minute ago
23 minute ago