2025 மே 21, புதன்கிழமை

வழமைக்கு மாறாக…

Editorial   / 2017 நவம்பர் 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்று (15) அதிகாலையிலிருந்து பொழது புலரும் வரை பனி மூட்டம் நிலவியது.

ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நிலவிய இந்தப் பனி மூட்டத்தால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்துக்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சத்துடன், மிகுந்த அவதானமாகப்  பயணிக்க வேண்டியிருந்தது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம். பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

வழமைக்கு மாறாக காணக்கிடைக்காத வகையில் நகரப் பகுதிகளில் நிலவிய பனி மூட்டத்தை, சிறுவர்கள் ஆச்சரியமாக கண்டு களித்தனர்.

(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X