Princiya Dixci / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எம்.அஹமட் அனாம்
கொரோனா தொற்றுக் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து, மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று, வாழைச்சேனை முகைதீன் ஜும்மாப் பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (27) காலை நடைபெற்றது.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஒன்று திரண்ட பொதுமக்கள், சிறுபான்மை மக்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு கோரி, தங்களது மத நம்பிக்கை பிரகாரம் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று, மும்மொழிகளிலும் சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், சட்டத்தரணி ஹபீப் றிபான், வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் வருகை தந்து, வாகனப் போக்குவரத்துக்கு போராட்டத்தால் இடையூறுகள் ஏற்படாமல் கடமைகளில் ஈடுபட்டனர்.




15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025