Mayu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி இன்றைய தினம் (14) காலை பங்குத்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள் உட்பட அருட்சகோதரிகள் என பலரும் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்களின் புனித நாள் களில் ஒன்றான திருநீற்றுப் புதன் தினம் இன்றாகும்.இன்று முதல் கிறிஸ்தவர்களின் புனித புண்ணிய தவக்காலம் ஆரம்பமாகிறது.
இத் தவக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அனுஸ்டிக்கப்படும்.மார்ச் மாதம் 29 ஆம் திகதி புனித பெரிய வெள்ளி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
எஸ்.றொசேரியன் லெம்பேட்



17 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
07 May 2026