Editorial / 2017 நவம்பர் 13 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக பாதுகாப்பு சேவை "கோல்ப் வெற்றிக்கிண்ணம்", திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தின் ஈகில் கோல்ட் லிங்ஸ் விளையாட்டு மைதானத்தில் அட்மிரல் ரவீந்ரா விஜே குணரத்ன தலைமையில் இன்று (13) காலை ஆரம்பமானது.
இவ்விளையாட்டு நிகழ்வானது, இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நான்கு வருடத்துக்கு ஒரு முறை இது நடத்தப்பட்டு வருகின்றது.
“விளையாட்டின் மூலம் நட்பு” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, 1948ஆம் ஆண்டு 05 நாடுகளின் பங்களிப்புடன் உருவாகி, இன்று 136 நாடுகள் உறுப்புரிமை பெற்று, “உலக பாதுகாப்பு சேவை விளையாட்டு கவுன்சில்” எனும் பெயரில் இயங்கி வருகின்றது.
1974ஆம் ஆண்டு முதல் இலங்கை இதன் உறுப்புருமையைப் பெற்றுள்ளதுடன், இலங்கையில் நடத்தப்படும் முதலாவது நிகழ்வாகும்.
பஹ்ரைன், கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஸ்பைன், உகண்டா, அமேரிக்கா, சிம்பாபேய் போன்ற நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் 24 விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளதாகவும், இலங்கை விமானப்படைத் தளைமையகம் தெரிவித்துள்ளது.
(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)





17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025