Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mayu / 2024 மார்ச் 31 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின்; தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை ஞாயிற்றுக்கிழமை (31) இராமகிருஷனமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் சம்பீராய பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
மாவட்ட பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ், கலந்துக்கொண்டிருந்தனர்.
மேலும், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கே. கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னால் மாவட்ட அரசாங்க அதிபர்களான கே.கருணாகரன், கலாமதி பத்மராஜா, கே.விமலநாதன் உள்ளிட்ட மட்டக்களப்பு இராமகிருஷ;னமிஷன் உதவி முகாமையாளர் சுவாமி சுரார்ச்சிதானந்த ஜீ மஹராஜ், மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள், வர்தகசங்கத்தினர் , மாணவர்கள், பெற்றோர்கள், மாவட்டத்தில் உள்ள திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
52 minute ago
1 hours ago