2025 மே 21, புதன்கிழமை

வீடுகள் கையளிப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரால பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) நடைபெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,  மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வீடுகளை உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளித்தார்

கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உடபட பலர் கலந்துகொண்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .