Freelancer / 2023 நவம்பர் 01 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று பிரதேச மக்களினால் இன்று (01) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.


குறித்த பிரதான வீதியானது நாடு முழுவதும் ஒரு லட்சம் கிலோமீற்றர் காபெட் வீதிகள் திட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டு உள்வாங்கப்பட்டு அதற்கான பெயர்பலகை நாட்டப்பட்டு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வீதிக்கு காப்பட் போடுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாத நிலையிலேயே பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் முன்பாக ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் முன்பாக முடிவடைந்தது. M



17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025