2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் யோகா பயிற்சி

Kogilavani   / 2016 ஜூன் 21 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

சர்வதேச யோகா தினத்தையொட்டி, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம், வாழும் கலை அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த யோகாசனம் மற்றும் தியானப் பயிற்சி, ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட 38 தமிழ்மொழி பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 6 இற்கு மேற்பட்ட மாணவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

யோகா கலை தொடர்பான போதனாசிரியர்கள் மற்றும் பிரம்மகுமாரிகள் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து, யோகா பயிற்சி மற்றும் தியான பயிற்சிகளை மாணவருக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இந்திய உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன்  ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .