2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹிரோசிமாவில் ஜனாதிபதி...

Editorial   / 2018 மார்ச் 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோசிமா நகருக்கு, நேற்று (15) விஜயம் செய்தார்.

ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதியை, அந்நகரின் நகர பிதா வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஹிரோசிமா நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள நூதனசாலையையும் பார்வையிட்டார்.

ஹிரோசிமா நகரின் மீது 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 06ஆம் திகதி முதலாவது அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் காரணமாக இந்த நகரம் 90 சதவீதம் அழிவுக்குட்பட்டதுடன், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரேநேரத்தில் உயிரிழந்தனர். அவ்வருட நிறைவில் மரணித்தவர்களின் எண்ணக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஆக அதிகரித்தது.

இந்த அனர்த்தம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சில நிமிடங்கள் உணர்வுபூர்வமாக இருந்தார். அத்துடன் அப்பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் கட்டங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .