2025 மே 24, சனிக்கிழமை

உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம்

மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப்  போராட்டமானது கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில்  திருகோணமலை, உவர்மலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று (5)  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உவர்மலைச் சந்தியிலுள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு, பேரணியாக  ஆளுநர் அலுவலகம்வரை சென்ற கடத்தப்பட்டு, காணாமல் போனோரின் உறவினர்கள்,  அங்கு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடத்தப்பட்டு, காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை  உடனடியாக வெளியிட வேண்டும் எனவும்   அரசியல் கைதிகளின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும் என்பதுடன், அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்  எனவும் கோரி
இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மேற்படி சங்கத்தின் தலைவி ஜெ.நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X