2025 ஜூலை 21, திங்கட்கிழமை

15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மாநாடு…

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (11) முற்பகல் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முறை மாநாடு இன்று முதல் 13ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.

தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பதுறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக எதிர்நோக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச, பிராந்திய நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .