2021 மே 06, வியாழக்கிழமை

750,000 ஆவது உல்லாசப் பயணிகள்

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்த 750,000 ஆவது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். இலங்கை உல்லாசப் பயணத்துறையில் இது புதிய சாதனையாகும்.

வருடமொன்றில் 700,000 இற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.

பலஸ்தீனத்தைச் சேர்ந்த கட்டாரில் வசிப்பவர்களான மொஹமட் அல் பார்டினி, அவரின் மனைவி மொனா அலாத்தர் ஆகியோரே இவ்வருடத்தின் 750,000 ஆவது உல்லாசப்  பயணிகளாக இலங்கைக்கு வந்தனர்.

டோஹாவிலிருந்து இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விருவரும் இலங்கை உல்லாசப் பிரயாண சபை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.

அவர்களுக்கு இலங்கை உல்லாச பிரயாண சபையினால் விசேட பரிசும் சலுகைப் பொதியொன்றும் வழங்கப்பட்டன.

இதற்குமுன் அதிகபட்சமாக  கடந்த வரும் 654,476 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகள், மேற்கு ஐரோப்பா, ஆகியவற்றிலிருந்து அதிக எண்ணிக்கையான பயணிகள் வருகை தந்துள்ளனர். இப்பகுதியிலிருந்து மாத்திரம் 250,847 வருகை தந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Pictures By: Kumarasiri Prasads )


 


  Comments - 0

 • chelvin Friday, 25 November 2011 11:20 AM

  அதிர்ஷ்ட ஜோடிகள் !

  Reply : 0       0

  GM Friday, 25 November 2011 01:48 PM

  வாங்க மச்சான் வாங்க ....

  Reply : 0       0

  Maheswaran Thilipan Friday, 25 November 2011 02:18 PM

  உலக எயிட்ஸ் தினமும் டூ ஓர் த்ரீ டைம்ஸ் கொண்டாட வேண்டி வரும் கவனம்.

  Reply : 0       0

  anas_shm@yahoo.com Saturday, 26 November 2011 03:54 AM

  வெளி நாட்டவர்களை வரவேற்பது நல்லது பட் நம் நாட்டவர்கள் பற்றி???

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .