Shanmugan Murugavel / 2021 மார்ச் 18 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கு இடையிலான சுற்றுப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டை வீழ்த்தி, காலிறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தகுதிபெற்றது.
அத்லெட்டிகோவின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த செல்சி, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, 3-0 என்ற மொத்த கோல் கணக்கிலேயே காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
செல்சி சார்பாக, ஹக்கீம் ஸியெச், எமெர்ஸன் பல்மீரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோவுடனான அவ்வணியின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச், தமது மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, 6-2 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, எரிக் மக்ஸிம் சோப்போ-மோட்டிங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ பரோலோ பெற்றிருந்தார்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago