Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.
லிவர்பூல் சார்பாக அன்றூ றொபேர்ட்சன், மொஹமட் சாலா, வேர்ஜில் வான் டிஜிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மார்க்கஸ் லொரன்டே பெற்றிருந்தார்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது. மியூனிச் சார்பாக ஹரி கேன் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை கோல் பல்மர் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026