Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மே 20 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபிஎல் 2024 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிரடியில் வெளுத்தும் வாங்கிக் கொண்டிருக்கும் அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.
இந்த ஐபிஎல் 2024ல் மட்டும் இதுவரை 41 சிக்சர்கள் விளாசி, அதிக சிக்சர்கள் விளாசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேபட்ன் விராட் கோலி 37 சிக்சர்களுடன் இருக்கிறார்.
அபிஷேக் சர்மாவின் ஸ்டைக் ரேட் 209 ஆக இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர்களில் அதிக ஸ்டைக் ரேட் கொண்ட பிளேயராகவும் இருக்கிறார். இவருக்கும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் நல்ல நட்பு இருக்கிறது.
குறிப்பாக அபிஷேக் சர்மாவின் குடும்பத்துக்கு சுப்மன் கில் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். மே 16 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருந்த போட்டியை பார்க்க அபிஷேக் சர்மாவின் அம்மா, தங்கை கோமல் சர்மா உள்ளிட்டோர் வந்திருந்தனர். துருதிஷ்டவசமாக அப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அதில் ஒரு நல்ல விஷயமாக சன்ரைசர்ஸ் அணி தங்களுடைய பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்ட பிறகு இரு அணி வீரர்கள் வழக்கம்போல் மைதானத்தில் அமர்ந்து ஜாலியாக உரையாடினர். அப்போது அபிஷேக் சர்மாவின் ஒட்டுமொத்த குடும்பமும் சுப்மன் கில்லை நேரடியாக சந்தித்து அளவளாவினர்.
அபிஷேக் சர்மாவின் அம்மா, தங்கை கோமல் சர்மா சுப்மன் கில்லை பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுடன் தங்களுக்கு எவ்வளவு அவரை பிடிக்கும் என்றும் தெரிவித்துவிட்டு, கில்லுடன் குடும்ப புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை இப்போது எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கும் அபிஷேக் சர்மாவின் தங்கை கோமல் ஷர்மா, என்னுடைய கிரஷ் சுப்மன் கில்லுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று மகிழ்ச்சியோடு பகிர்திருக்கிறார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் செம வைரலாக சென்று கொண்டிருக்கிறது.
22 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
2 hours ago