2025 மே 19, திங்கட்கிழமை

அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மெல்பேணில் இன்று நடைபெற்ற அயர்லாந்துடனான குழு ஒன்று சுப்பர் – 12 போட்டியில் இங்கிலாந்து தோற்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் வேகமான ஆரம்பத்தைப் பெற்ற அயர்லாந்து, மார்க் வூட்டிடம் போல் ஸ்டேர்லிங்கை இழந்தது. பின்னர் அணித்தலைவர் அன்டி போல்பிரயனின் 62 (47), லொர்கன் டக்கரின் 34 (27) ஓட்டங்களால் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற  அயர்லாந்து இறுதி 7 விக்கெட்டுகளையும் 25 ஓட்டங்களுக்குப் பறிகொடுத்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களையே பெற்றது. பந்துவீச்சில், லியம் லிவிங்ஸ்டோன் மற்றும் வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெடையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியானது துடுப்பெடுத்தாடும்போது 14.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டு போட்டி முடிவுக்கு வந்த நிலையில், டக் வேர்த் லூயிஸ் முறையில் ஐந்து ஓட்டங்களால் அயர்லாந்து வென்றது. துடுப்பாட்டத்தில், மொயின் அலி ஆட்டமிழக்காமல் 24 (12), டேவிட் மலன் 35 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜொஷ் லிட்டில் 2, ஜோர்ஜ் டொக்ரல், பரி மாக்கார்தி, பியொன் ஹான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக போல்பிரயன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X