Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் இடம்பெற்றுவரும் டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, உலகின் ஆறாம் நிலை வீரரான, பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ் தகுதிபெற்றுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், 6-0, 6-2 என்ற நேர் செட்களில், உலகின் எட்டாம் நிலை வீரரான, பெல்ஜியத்தின் டேவிட் கொபினைத் தோற்கடித்தே அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்ம், 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில், உலகின் 10ஆம் நிலை வீரரான, ஸ்பெய்னின் பப்லோ கரென்னோ புஸ்டாவை வென்றார்.
இந்நிலையில், நாளை இரவு 7.30க்கு இடம்பெற்றவுள்ள போட்டியில், டொனிக் தெய்மும் டேவிட் கொபினும் சந்திக்கின்றனர். இப்போட்டியில் வெற்றிபெறுவரே, கிறிகர் டிமிட்ரோவுடன் இக்குழுவிலிருந்து அரையிறுதிப் போட்டிக்களுக்கு தகுதிபெறுவர்.
நாளை மறுதினம் அதிகாலை 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், ஏற்கெனவே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள கிறிகர் டிமிட்ரோவ், தனது இறுதி குழுநிலைப் போட்டியில், பப்லோ கரென்னோ புஸ்டாவைச் சந்திக்கிறார்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago