Editorial / 2018 ஜனவரி 24 , பி.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.
சிமோனா ஹலெப், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வென்றார்.
இந்நிலையில், ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், தனது காலிறுதிப் போட்டியில், 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸை எதிர்கொள்ளவுள்ளதுடன், இப்போட்டியைத் தொடர்ந்து 10.30க்கு இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், அங்கெலிக் கேர்பரை சிமோனா ஹலெப் எதிர்கொள்கிறார்.
இதேவேளை, நடப்புச் சம்பியனும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், தனது காலிறுதிப் போட்டியில் 7-6 (7-1), 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் தோமஸ் பேர்டிச்சை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
தென்கொரியாவின் சொங் யொங், தனது காலிறுதிப் போட்டியில் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரனை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
51 minute ago
56 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago
3 hours ago
5 hours ago