Shanmugan Murugavel / 2016 ஜனவரி 27 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகளுக்கு, ஐக்கிய இராச்சியத்தின் அன்டி மரே தகுதிபெற்றுள்ளார். பெண்களுக்கான போட்டிகளில், ஜேர்மனியின் அஞ்செலிக் கேர்பரும் ஐக்கிய இராச்சியத்தின் ஜொஹன்னா கொன்டாவும் தகுதிபெற்றனர்.
ஸ்பெய்னைச் சேர்ந்த உலகின் 8ஆம் நிலை வீரரான டேவிட் பெரரை எதிர்கொண்ட, உலகின் 2ஆம் நிலை வீரரான அன்டி மரே, 6-3, 6-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியைப் பெற்றதன் மூலம், இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான தனது வாய்ப்பை, அவர் அதிகரித்துக் கொண்டார். அவரது அரையிறுதிப் போட்டியில், கனடாவின் மிலோஸ் றாவோனிக், பிரான்ஸின் காயெல் மொன்பில்ஸ் இருவரில் ஒருவரையே சந்திக்கவுள்ள நிலையில், அப்போட்டியில் அவர் வெற்றிபெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவர், அடுத்த அரையிறுதிப் போட்டியில், நொவக் ஜோக்கோவிச்சும் ரொஜர் பெடரரும் மோவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில், பெண்களுக்கான ஒற்றைய போட்டிகளில், 7ஆம் நிலை வீராங்கனையான அஞ்செலிக் கேர்பர், 14ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரெங்காவை, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
மற்றையதொரு போட்டியில், ஐக்கிய இராச்சியத்தின் ஜொஹன்னா கொன்டா, சீனாவின் ஸங் ஷ{வாயை, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார். இதன்படி, இவர்களிருவருதே, அரையிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளனர். மற்றைய போட்டிக்கு, செரினா வில்லியம்ஸூம் அக்னியஸ்கா ரட்வன்ஸ்காவும் ஏற்கெனவே தகுதிபெற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .