2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 07 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளை நியூசிலாந்தும், அடுத்த இரண்டு போட்டிகளை அவுஸ்திரேலியாவும் வென்றிருந்த நிலையில், வெலிங்டனில் இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க ஐந்தாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றமையைத் தொடர்ந்தே, 3-2 என தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ட்ரெண்ட் போல்ட், இஷ் சோதி, மார்க் சப்மன், டிம் செளதியிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், மத்தியூ வேட்டின் 44 (29), ஆரோன் பின்ஞ்சின் 36 (32), மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் 26 (26) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில், இஷ் சோதி நான்கு ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதோடு, மிற்செல் சான்ட்னெர் நான்கு ஓவர்களில் 21 ஓட்டங்களை வழங்கியதோடு, மார்க் சப்மன் இரண்டு ஓவர்களில் ஒன்பது ஓடங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு, 143 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, மார்டின் கப்திலின் 71 (46), டெவோன் கொன்வேயின் 36 (28), கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத 34 (16) ஓட்டங்களோடு, 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், அஸ்தன் அகர் நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்ததுடன், ஜஹை றிச்சர்ட்ஸன் மூன்று ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக மார்டின் கப்திலும், தொடரின் நாயகனாக இஷ் சோதியும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X