2025 மே 19, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் போராடும் மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் போராடி வருகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், பேர்த்தில் நேற்று ஆரம்பமான குறித்த டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, மர்னுஷ் லபுஷைன் 204 ஓட்டங்களைப் பெற்றபோது கிறேய்க் பிறத்வெய்ட்டிடம் அவரைப் பறிகொடுத்தது.

தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தும், ட்ரெவிஸ் ஹெட்டும் ஓட்டங்களைக் குவித்த நிலையில் ஹெட் 99 ஓட்டங்களுடன் பிறத்வெய்ட்டிடம் வீழ்ந்ததோடு அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 598 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. ஸ்மித் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதையடுத்து தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் டிட்டினேரியன் சந்தர்போல் 47 ஓட்டங்களுடனும், பிறத்வெய்ட் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X