Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலியில் இடம்பெற்ற இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை 229 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இலங்கையணி, தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 2-0 என்றவாறு தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் இலங்கையணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், குஷால் மென்டிஸ் 86, அஞ்செலோ மத்தியூஸ் 54, குஷால் பெரேரா 49, தனஞ்சய டி சில்வா 37 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மிற்செல் ஸ்டார்க் ஐந்து, நேதன் லையன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 106 ஓட்டங்களுடன் சுருண்டது. துடுப்பாட்டத்தில், டேவிட் வோணர் 42, மிற்செல் மார்ஷ் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக, டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும் லக்ஷன் சந்தகன், விஷ்வ பெர்ணாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, டில்ருவான் பெரேரா 64, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் 47, குஷால் பெரேரா 35, தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் ஆறு, நேதன் லையன் இரண்டு, ஜோஸ் ஹெசில்வூட், ஜோன் ஹொலண்ட் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து, 413 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், டேவிட் வோணர் 41, ஸ்டீவன் ஸ்மித் 30, அடம் வொஜஸ் 28, மிற்செல் ஸ்டார்க் 26, பீற்றர் நெவில் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா ஆறு, ரங்கன ஹேரத் இரண்டு, லக்ஷன் சந்தகன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக டில்ருவான் பெரேரா தெரிவானார். இப்போட்டியில், பத்து விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் அரைச்சதத்தையும் பெற்றிருந்தார். இவ்வாறான பெறுதியை பெற்ற முதலாவது இலங்கை வீரர் இவராவார். தவிர, தனது 11ஆவது டெஸ்ட்டில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி, வேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையராகவும் தன்னை பதிவு செய்து கொண்டார்.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago