Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றமையைத் தொடர்ந்தே ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, அபிஷேக் ஷர்மாவின் 75 (37), ஷுப்மன் கில்லின் 29 (19) ஓட்டங்கள் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றபோதும் ரிஷாட் ஹொஸைன் (2), முஸ்தபிசூர் ரஹ்மான், தன்ஸிம் ஹஸன் சகிப்பிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களையே பெற்றது. ஹர்திக் பாண்டியா 38 (29) ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு 169 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சார்பாக சைஃப் ஹஸன் 69 (51) ஓட்டங்களைப் பெற்றபோது, ஜஸ்பிரிட் பும்ரா (2), குல்தீப் யாதவ் (3), அக்ஸர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி (2), திலக் வர்மாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களையே பெற்று 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அந்தவகையில் ஏற்கெனவே பாகிஸ்தானை வென்றிருந்த இந்தியா, தமது அடுத்த இலங்கையுடனான போட்டிக்கு முன்னரே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .