Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில் காயம் காரணமாக இந்தியக் குழாமில் ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், முன்னாள் அணித்தலைவர்களான விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளதுடன், தீபக் ஹூடா, அர்ஷ்டீப் சிங், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தமதிடங்களைத் தக்க வைத்துள்ளனர்.
தயார்நிலை வீரர்களாக அக்ஸர் பட்டேல், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இஷன் கிஷன், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், றிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், புவ்னேஷ்வர் குமார், அர்ஷ்டீப் சிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சஹால்.
மேலதிக வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் பட்டேல், தீபக் சஹர்
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026