Editorial / 2026 மே 05 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி.கபில
தென் கொரியாவில் நடைபெற்ற 4-ஆவது ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் (Asian Throwing Championship - 2026) தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தில்ஹானி லேக்கம்கே மற்றும் சுமேத ரணசிங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (04) வந்தடைந்தனர்.
ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 21 நாடுகளின் வீர, வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டித் தொடர், கடந்த மே மாதம் 02 மற்றும் 03-ஆம் திகதிகளில் தென் கொரியாவின் மொக்போ (Mokpo) நகரில் நடைபெற்றது.
அதிகக் குளிர் மற்றும் மழை போன்ற சவாலான காலநிலை நிலவிய போதிலும், இந்தப் பதக்கங்களை வென்றுள்ளதாகத் தெரிவித்த விளையாட்டு வீரர்கள், இவ்வாறான சவால்கள் இல்லாதிருந்தால் தங்களால் தங்கப் பதக்கங்களை வென்றிருக்க முடியும் என விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
தென் கொரியாவின் இன்சியோன் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-471 எனும் விமானம் மூலம் திங்கட்கிழமை (04) மாலை 04:45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை வரவேற்பதற்காக இலங்கை இராணுவத்தின் விளையாட்டுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


41 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026