Shanmugan Murugavel / 2016 மார்ச் 01 , மு.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மிகுதிப் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஸ்டாபிசூர் ரஹ்மான் விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக, பிரசவ விடுமுறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை (29) டாக்காவுக்குத் திரும்பிய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தமீம் இக்பால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற இலங்கைக்கெதிரான போட்டியிலேயே முஸ்டாபிசூர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்டாபிசூருக்கு முதலாம் தர வகையிலான காயமே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பங்களாதேஷின் உடற்றகுதி நிபுணர் பேஜெடுல் இல்ஸாம் கான், எப்போது முஷ்டாபிசூர் போட்டிகளில் விளையாடக்கூடிய தகுதியை பெறுவார் என்று தெரிவித்திருக்கவில்லை.
கடந்த மாதம் இடம்பெற்ற சிம்பாப்வேக்கெதிரான தொடரின்போது தோளில் காயமடைந்தமை காரணமாக, அவரால் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்க முடியாமல் போயிருந்தது.
55 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago