Mithuna / 2024 ஜனவரி 19 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், அடிலெய்ட்டில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியின் நேற்றைய நாளை தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தபோதும் ட்ரெவிஸ் ஹெட்டின் 119, உஸ்மான் கவாஜாவின் 45 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷமர் ஜோசப் 5, ஜஸ்டின் கிறேவ்ஸ் 2, கேமார் றோச் 2, அல்ஸாரி ஜோசப் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் ஜொஷ் ஹேசில்வூட் (4), கமரோன் கிறீன், நேதன் லையனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று 22 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் ஜோஷுவா டா சில்வா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026