Shanmugan Murugavel / 2026 மார்ச் 10 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது மிர்பூரில் புதன்கிழமை (11) பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரானது ஏறத்தாழ சமபலமுள்ள அணிகளுக்கிடையேயான தொடராகவே காணப்படுமெனத் தெரிகிறது.
பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் சைம் அயூப், பாபர் அஸாம் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சஹிப்ஸடா பர்ஹான், மாஸ் சடகட் ஆகியோருக்கு தம்மை அணியில் நிலைநிறுத்த சிறந்த வாய்ப்பாகக் காணப்படுகிறது.
இதேவேளை சல்மான் அக்ஹா அணியில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

மறுபக்கமாக லிட்டன் தாஸிடமிருந்து ஓட்டங்கள் வராத நிலையில் அணியிலிருந்திருக்காத அவர் தற்போதைய மீள்வருகையின்போது ஐந்தாமிடத்தில் களமிறங்கவுள்ளார். ஏனெனில் சைஃப் ஹஸன், செளமியா சர்கார், தெளஹிட் ஹிரிடோய், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ என முன்வரிசை நெருக்கடியாகக் காணப்படுகிறது.
தவிர ஷகிப் அல் ஹஸன், மகமதுல்லா, முஷ்பிக்கூர் ரஷீம் ஆகியோர் இல்லாத நிலையில் அனுபவமுள்ள சுழற்பந்தைவீச்சை எதிர்கொள்ளக்கூடிய வீரரின் தேவைப்பாடே லிட்டனுக்கு சாதகமாக அமைந்தது. அஃபிஃப் ஹொஸைனின் மீள்வருகையும் பங்களாதேஷுக்கு பலத்தை வழங்கலாம்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago