2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

ஆரம்பிக்கிறது உலகக் கிண்ணம்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரானது குவஹாத்தியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள தொடரை நடாத்தும் நாடுகளான இந்தியா, இலங்கைக்கிடையேயான போட்டிகளுடன் ஆரம்பிக்கிறது.

இந்தியா, இலங்கை தவிர நடப்புச் சம்பியன்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த 13ஆவது உலகக் கிண்ணத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி பெறவில்லை.

அவுஸ்திரேலியா ஏழு தடவைகளும், இங்கிலாந்து நான்கு தடவைகளும், நியூசிலாந்து ஒரு தடவையும் உலகக் கிண்ணத்தை வென்றுள்ள நிலையில் இம்முறையும் அவுஸ்திரேலியா வெல்லுவதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.

எட்டு அணிகளும் மற்றைய அணிகளுடன் ஒவ்வொரு முறையும் மோதி அதில் முதல் நான்கு இடங்ளும் விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெறும்.

மைதானங்களின் பரிட்சயம் காரணமாக சாமரி அத்தப்பத்துவுக்கு ஹர்ஷிதா சமரவிக்கிரம, விஷ்மி குணரத்ன, கவிஷா டில்ஹாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் இலங்கை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் ஆச்சரியப்படுத்துக்கில்லை

இந்த உலகக் கிண்ணமானது அவுஸ்திரேலியாவின் அலைஸா ஹீலி, மேகன் ஸ்கட், நியூசிலாந்தின் சோபி டெவைன், சுசி பேட்ஸ், இந்தியாவின் ஹர்மன்பிறீட் கெளர், இலங்கையின் சாமரி அத்தப்பத்து, தென்னாபிரிக்காவின் மரிஸனே கப், இங்கிலாந்தின் ஹீதர் நைட் உள்ளிட்டோருக்கு இறுதி உலகக் கிண்ணமாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .