2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் மகளுக்கு அனுப்பிய மெஸ்ஸி

Editorial   / 2022 டிசெம்பர் 28 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட ஆர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் செல்ல மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். இதனை ஸிவா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கால்பந்தாட்ட கோல்கீப்பராக தனது விளையாட்டு கரியரை தொடங்கியவர் தோனி. பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களையும் வென்ற ஒரே கேப்டனும் அவர்தான்.

தோனி மற்றும் மெஸ்ஸி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதனை உலகக் கோப்பையை வைத்தே ஓர் உதாரணமாக சொல்லலாம். இருவரும் தங்கள் நாட்டை உலகக் கோப்பை தொடரில் வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தவர்கள். இருவருமே இறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். அவர்கள் விளையாடிய விளையாட்டு மட்டும்தான் இங்கு வேறுபடுகிறது.

இந்தச் சூழலில் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தோனியின் ஏழு வயதான மகள் ஸிவாவுக்கு அர்ஜென்டினா அணியின் ஜெர்ஸியை தனது கையொப்பமிட்டு மெஸ்ஸி அனுப்பி உள்ளார். “Para Ziva என அவர் போர்ச்சுகல் மொழியில் எழுதி தனது கையொப்பமிட்டு இந்த ஜெர்ஸியை மெஸ்ஸி, ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். அதனை ஆசையுடன் ஸிவா அணிந்துகொண்டு ‘அப்பாவை போலவே மகளும்’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X