Editorial / 2019 மே 22 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோப்பா அமெரிக்கா தொடருக்காக, ஆர்ஜென்டீனாவில் பயிற்சியாளர் லியனல் ஸ்கலோனியால் நேற்று அறிவிக்கப்பட்ட 23 பேர் கொண்ட ஆர்ஜென்டீனக் குழாமில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர முன்களவீரரான லியனல் மெஸ்ஸியுடன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் நட்சத்திர முன்களவீரரான சேர்ஜியோ அகுரோவும் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான ஏஞ்சல் டி மரியாவும் குறித்த குழாமில் இடம்பெற்றுள்ளபோதும், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான கொன்ஸலோ ஹியூகைன், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் முன்களவீரரான மெளரோ இகார்டி ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
கடந்தாண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து, வெனிசுவேலா, மொராக்கோவுக்கெதிரான சிநேகபூர்வப் போட்டிகளில் இவ்வாண்டு மார்ச் மாதம் ஆர்ஜென்டீனக் குழாமுக்கு லியனல் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா திரும்பியிருந்தபோதும், உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து தற்போதே ஆர்ஜென்டீனக் குழாமுக்கு சேர்ஜியோ அகுரோ திரும்புகின்றார்.
பிரேஸிலில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கும் குறித்த தொடரில், கொலம்பியா, பராகுவே, அழைக்கப்பட்ட நாடான கட்டாருடன் குழு பியில் ஆர்ஜென்டீனா இடம்பெற்றுள்ளது.
31 minute ago
44 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
55 minute ago
2 hours ago