Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், பார்சிலோனா அணிக்கும் ஆர்சனல் அணிக்குமிடையிலான போட்டியில், லியனல் மெஸ்ஸியின் இரட்டைக் கோல்களின் உதவியுடன், பார்சிலோனா அணி வெற்றிபெற்றது.
போட்டியின் முதற்பாதியில், இரண்டு அணிகளும் அதிரடியாக விளையாடின. நேமர், மெஸ்ஸி மூலம், கோல் பெறும் வாய்ப்புகளை பார்சிலோனா உருவாக்கியது. எனினும், முதற்பாதியில் கோலெதும் பெறப்படாத நிலையில் முடிவடைந்தது.
இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் சிறப்பாக மோதிய போதிலும், 81ஆவது நிமிடத்தில், மெஸ்ஸி பெற்ற கோலின் உதவியுடன், பார்சிலோனா அணி 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது. பின்னர், 84ஆவது நிமிடத்தில், பார்சிலோனா அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, லியனல் மெஸ்ஸி கோலாக்கினார். இதன்மூலம், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றார்.
இப்போட்டியில் கிடைத்த தோல்வியின் மூலம், சம்பியன்ஸ் லீக்கிலிருந்து வெளியேறும் ஆபத்தை ஆர்சனல் எதிர்கொண்டுள்ளது. போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆர்சனல் அணியின் முகாமையாளர் ஆர்சின் வெங்கர், பார்சிலோனா அணி, அதிரடியாக விளையாடி, 2-0 என்ற கோல் முன்னிலையைப் பெறுவதற்கு அனுமதித்தமை, வீரர்களின் பக்கத்தில் காணப்பட்ட தவறு எனத் தெரிவித்தார்.
'என்னிடம் காணப்படும் வருத்தம் என்னவெனில், இறுதி 15 நிமிடங்களில், போட்டியை ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலைமை காணப்பட்ட போது, கோலை நாம் அனுமதித்திருந்தோம்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .