Shanmugan Murugavel / 2016 ஜூன் 29 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூரோ கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து அணி, காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறாமையைத் தொடர்ந்து, அவ்வணியின் முகாமையாளரான றோய் ஹொட்ஜ்ஸன் பதவி விலகியிருந்த நிலையில், அடுத்த முகாமையாளரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த நியமனம் உடனடியாக இடம்பெறாது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்தின் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்ட்டின் கிளெனின் கருத்தின்படி, இவ்வாண்டு பிறீமியர் லீக் பருவகாலம் வரை, இங்கிலாந்து காத்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பருவகாலத்தின் முடிவில், சரியான முகாமையாளர் கிடைப்பாராயின், அவரைப் பணிக்கமர்த்துவதற்கு இங்கிலாந்து முயல்வதாகவும், அதனாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பருவகாலத்தின் முடிவில், ஆர்சனல் அணியின் முகாமையாளரான ஆர்சீன் வெங்கர் உள்ளிட்ட சிலரின் ஒப்பந்தங்கள், முடிவுக்கு வரவுள்ளன. எனவே தான், இதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.
'நாங்கள் செய்ய வேண்டியத, சில மாதங்களுக்குக் காத்திருப்பது என்றால், அவ்வாறு செய்தால் அதுவே சரியான முடிவாக அமையும்" என்று தெரிவித்த மார்ட்டின் கிளென், அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், புதியவர் வரும்வரை, இடைக்கால நியமனமாக ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago