Shanmugan Murugavel / 2026 ஜனவரி 27 , பி.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை (28) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதை இந்தியா ஏற்கெனவே உறுதி செய்த நிலையில், இருபதுக்கு – 20 உலகக் கிண்ணமானது 10 நாள்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா போன்ற வீரர்களுக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்படலாம்.
அந்தவகையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்போட்டியில் வாய்ப்புக் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை இஷன் கிஷன் ஓட்டங்களைப் பெறுவதோடு, சஞ்சு சாம்சன் ஓட்டங்களைப் பெறத் தடுமாறுகையில் இறுதி இரண்டு போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க இனிங்ஸை ஆடா விட்டால் உலகக் கிண்ணத்தில் திலக் வர்மா அணிக்குத் திரும்பும்போது தனதிடத்தை அவர் இழக்க நேரிடும் என்பதால் அவர் இப்போட்டியில் கட்டாயம் ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இந்திய அணியின் துடுப்பாட்டவீரர்களைக் கட்டுப்படுத்துவதே நியூசிலாந்துக்கு இடியப்பச் சிக்கலாக உள்ள நிலையில், லொக்கி பெர்கியூசன், மிஷெல் பிறேஸ்வெல் ஆகியோர் குழாமில் உள்ளபோதும் இப்போட்டியில் விளையாடுவார்களா என்பது தெளிவில்லாமலுள்ளது.
ஜேம்ஸ் நீஷம் குழாமில் இணைந்துள்ள நிலையில் அவர் ஜேக்கப் டஃபியை பிரதியிடக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றன.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago