2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது மெல்பேணில், இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதல் மூன்று போட்டிகளிலும் தோற்றுத் தொடரை ஏற்கெனவே இழந்துள்ள இலங்கை, ஆறுதல் வெற்றியொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு துடுப்பாட்டத்தில் மிகவும் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

அந்தவகையில், தொடர்ந்து தடுமாறி வரும் தனுஷ்க குணதிலக, சரித் அஸலங்கவுக்குப் பதிலாக உள்ளூர்ப் போட்டிகளில் சாதித்த ஜனித் லியனகே, கமில் மிஷாரவுக்கு அறிமுகம் வழங்குமாறு அங்கலாய்ப்பு காணப்படுகின்றது.

தவிர, காயமடைந்த நுவான் துஷாரவுக்குப் பதிலாக அணியில் ஷிரான் பெர்ணாண்டோ அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, குசல் மென்டிஸ், அவிஷ்க பெர்ணான்டோ உள்ளிட்டோர் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில், மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜஹை றிச்சர்ட்ஸன் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், பென் மக்டர்மூர், கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மத்தியூ வேட், ஜொஷ் இங்லிஷ் போன்றோரிடமிருந்து முழமையான துடுப்பாட்டப் பெறுபேற்றை அவுஸ்திரேலியா எதிர்பார்க்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X