2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆஷஸ் குழாமில் அலெக்ஸ் காரி

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட்டானது அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னரான பயிற்சிப் போட்டியை எதிர்கொள்வதற்கான அவுஸ்திரேலியாவின் ஆரம்ப 25 பேர் கொண்ட குழாமில் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் காரி இடம்பெற்றுள்ளார்.

அந்தவகையில், குறித்த குழாமில் டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன், மத்தியூ வேட் என மொத்தமாக மூன்று விக்கெட் காப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், குறிப்பிடத்தக்கதாக குறித்த குழாமில் சகலதுறைவீரர்கள் கிளன் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் பிரகாசித்து வரும் மர்னுஸ் லபுஷைன், கமரோன் பான்குரொஃப்ட், பீற்றர் சிடில் உள்ளிட்டோரும் இக்குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆஷஸ் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இக்குழாமானது 16 பேர் கொண்டதாகக் குறைக்கப்படவுள்ளது.

அந்தவகையில், 16 பேர் கொண்ட குழாமானது பெரும்பாலும் ஐந்து வேகப்பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள், இரண்டு விக்கெட் காப்பாளர்களை உள்ளடங்கியதாக அமையும் என்றவாறான கருத்துகளை அவுஸ்திரேலியாவின் தெரிவுக்குழுத் தலைவர் ட்ரெவர் ஹோன்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

குழாம்: கமரோன் பான்குரொஃப்ட், ஜக்ஸன் பேர்ட், ஜோ பேர்ண்ஸ், அலெக்ஸ் காரி, பற் கம்மின்ஸ், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், மார்க்கஸ் ஹரிஸ், ஜொஷ் ஹேசில்வூட், ஜோன் ஹொலான்ட், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மர்னுஸ் லபுஷைன், நேதன் லையன், மிற்சல் மார்ஷ், மைக்கல் நேஸர், டிம் பெய்ன், குர்டிஸ் பட்டர்ஸன், ஜேம்ஸ் பற்றின்சன், விக் புகொவ்ஸ்கி, பீற்றர் சிடில், ஸ்டீவ் ஸ்மித், மிற்சல் ஸ்டார்க், கிறிஸ் ட்ரிமெய்ன், மத்தியூ வேட், டேவிட் வோணர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .