Shanmugan Murugavel / 2026 மார்ச் 06 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற நொட்டிங்ஹாம் பொரெஸ்டுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.
சிற்றி சார்பாக அந்தோனி செமென்யோ, றொட்றி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரெஸ்ட் சார்பாக மோர்கன் கிப்ஸ்-வைட், எலியன்ட் அன்டர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது. யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கஸேமீரோ பெற்றதோடு, நியூகாசில் சார்பாக அந்தனி கோர்டன், வில்லியம் ஒஸுலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 67 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 60 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் சிற்றி உள்ளது. 51 புள்ளிகளுடன் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், வில்லாவும் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட ஆர்சனல் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .