Shanmugan Murugavel / 2026 மார்ச் 22 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், எவெர்ற்றனின் மைதானத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
எவெர்ற்றன் சார்பாக பெட்டோ இரண்டு கோல்களையும் இலிமன் டியையே ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிலோஸ் கெர்கெஸ் பெற்றதோடு, பிறைட்டன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் டனி வெல்பக் பெற்றிருந்தார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 61 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும் 55 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் 51 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அஸ்தன் வில்லாவும் காணப்படுகின்றன. இதில் சிற்றியும் வில்லாவும் மற்றைய அணிகளை விட தலா ஒவ்வொரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
9 hours ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Mar 2026