2025 மே 23, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்திடம் வீழ்ந்த இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 30 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை தோற்றுள்ளது.

நடைபெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இலங்கை சார்பாக, சரித் அஸலங்க, தனஞ்சய லக்‌ஷன் ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டதுடன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பிரவீன் ஜெயவிக்கிரம அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, ஆரம்பத்திலேயே கிறிஸ் வோக்ஸ் (2), டேவிட் வில்லியிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது.

பின்னர் அணித்தலைவர் குஷல் பெரேரா, வனிடு ஹஸரங்கவின் இணைப்பாட்டத்தில் இனிங்ஸை இலங்கை நகர்த்தியது. இச்சந்தர்ப்பத்தில் 54 (65) ஓட்டங்களுடன் ஹஸரங்க வோக்ஸிடம் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த தனஞ்சய லக்‌ஷன் வோக்ஸிடமும், ரமேஷ் மென்டிஸ் மொயின் அலியிடம் வீழ்ந்ததோடு, குஷல் பெரேராவும் 73 (81) ஓட்டங்களுடன் டேவிட் வில்லியிடம் வீழ்ந்தனர்.

இதையடுத்து, பினுர பெர்ணாண்டோ வில்லியிடமும், துஷ்மந்த சமீரவும், பிரவீன் ஜெயவிக்கிரமவும் ரண் அவுட் முறையில் ஆட்டமிழக்க, 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களையே இலங்கை பெற்றது.

பதிலுக்கு, 186 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜொனி பெயார்ஸ்டோவின் 43 (21) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றது.

எனினும், லியாம் லிவிங்ஸ்டோன் சாமிக கருணாரத்னவிடமும், பெயார்ஸ்டோ பினுர பெர்ணான்டோவிடமும், மோர்கனும், சாம் பில்லிங்ஸும் துஷ்மந்த சமீரவிடமும் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆட்டமிழந்திருந்தனர்.

எவ்வாறெனினும், ஜோ றூட்டின் ஆட்டமிழக்காத 79 (87), மொயின் அலியின் 28 (57) ஓட்டங்களோடு 34.5 ஓவர்களில் வெற்றியிலக்கை இங்கிலாந்து அடைந்து. இறுதியில் அலி, சமீரவிடம் வீழ்ந்திருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக வோக்ஸ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X