2025 மே 23, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் கில் சந்தேகம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 01 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

காலில் கில் காயத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எக்காலில் கில் காயத்துக்குள்ளார் என்பது இன்னும் தெளிவில்லாமலுள்ளது. எங்கே, எப்போது கில் காயமடைந்தார் என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில், தொடர்ந்தும் இங்கிலாந்தில் கில் இருக்கவுள்ள நிலையில், காயத்தின் மோசமான நிலையைப் பொறுத்து இந்திய அணி முகாமைத்துவம் இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

அந்தவகையில், காயத்திலிருந்து கில் குணமடையத் தவறினால், அவரை அணியில் பிரதியிட மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஆகியோர் குழாமில் காணப்படுவதுடன், மேலதிக வீரர்கள் பட்டியலில் புதுமுகவீரர் அபிமன்யு ஈஸ்வரன் காணப்படுகின்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X