Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு 399 ஓட்டங்கள் வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா தோற்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா யஷஸ்வி ஜைஸ்வாலின் 209 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 396 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜேம்ஸ் அன்டர்சன், ஷொய்ப் பஷிர், றெஹான் அஹ்மட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டொம் ஹார்ட்லி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தி, ஸக் குறோலி 76, அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 47 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 6, குல்தீப் யாதவ் 3, அக்ஸர் பட்டேல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஷுப்மன் கில்லின் 104, அக்ஸர் பட்டேலின் 45, இரவிச்சந்திரன் அஷ்வினின் 29, ஷ்ரேயாஸ் ஐயரின் 29 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று 399 ஓட்டங்களை இங்கிலாந்துக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சில், டொம் ஹாட்லி 4, றெஹான் அஹ்மட் 3, ஜேம்ஸ் அன்டர்சன் 2, ஷொய்ப் பஷிர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
20 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago