Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து பதினொருவர், இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹமில்டனில் இன்று ஆரம்பித்த இரண்டு நாள் பகல் – இரவு பயிற்சிப் போட்டியில் இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில், முதலில் துடுப்பெடுத்தாடி வருகிகின்ற நியூசிலாந்து பதினொருவர் அணி இங்கிலாந்துக்கெதிராக ஓட்டங்களைக் குவித்துள்ளது.
ஒரு கட்டத்தில், 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து பதினொருவர் அணி, விக்கெட் காப்பாளர் டொம் பிளன்டல், கைல் ஜேமிஸன் ஆகியோர் பெற்ற சதங்கள் காரணமாக, இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 376 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில், டொம் பிளன்டல் 131, கைல் ஜேமிஸன் 101, ஸ்கொட் குக்லியைன் 45, டவ் பிறேஸ்வெல் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேம்ஸ் அன்டர்சன் 4, மார்க் வூட் 2, ஸ்டூவர்ட் ப்ரோட், மொயின் அலி, டேவிட் மலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
14 Jul 2025
14 Jul 2025