Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் முன்னிலையில் காணப்படுகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், முல்தானில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் ஷண் மசூட் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே அப்துல்லா ஷஃபிக்கையும், மசூட்டையும் ஜேக் லீச்சிடம் இழந்தது.
பின்னர் சைம் அயூப்பும், அறிமுக வீரர் கம்ரான் குலாமும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில் 77 ஓட்டங்களுடன் மத்தியூ பொட்ஸிடம் அயூப் வீழ்ந்தார். அடுத்து வந்த செளட் ஷகீலும் உடனேயே பிறைடன் கார்ஸிடம் வீழ்ந்தார்.
இறுதி நேரத்தில் 118 ஓட்டங்களுடன் குலாமும் ஷொய்ப் பஷிரிடம் வீழ்ந்த நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 259 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது. தற்போது களத்தில் மொஹமட் றிஸ்வான் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களுடனும், சல்மான் அக்ஹா ஐந்து ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago