Editorial / 2018 ஜனவரி 11 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், ஆஷஸை 4-0 என இழந்த இங்கிலாந்துக் குழாமில் பெரிதாக மாற்றமெதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இங்கிலாந்து சார்பாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஆகியோரே குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், துடுப்பாட்ட வீரர் கரி பலன்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் டொம் குரான், ஜேக் போல் ஆகியோரே குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குழாம்: ஜோ றூட், மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோ, ஸ்டூவர்ட் ப்ரோட், அலிஸ்டயர் குக், மேஸன் கிரேன், பென் போக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலன், கிரேய்க் ஒவெர்ட்டன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago