2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, கார்டிப்பில் இன்றிரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரின் மூன்று போட்டிகளும் இரண்டு அணிகளும் எவ்வாறு பயணிக்க வேண்டுமென்பதை வெளிக்காட்டுமென நம்பப்படுகின்றது.

இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் ஹன்ட்ரட் தொடரில் பிரகாசித்த றெஹான் அஹ்மட்டைச் சோதித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது. பென் டக்கெட், ஜேமி ஸ்மித்துக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் ஜொஸ் பட்லருடன் பில் ஸோல்ட் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்க வில் ஜக்ஸ் பின்னுக்கே வருவாரென எதிர்பார்க்கப்படுவதோடு, டொம் பன்டனுக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. தவிர சிறப்பான போர்மில் உள்ள சாம் கர்ரனின் இணைப்பு இங்கிலாந்துக்கு பலத்தை வழங்கும்.

மறுபக்கமாக மார்கோ ஜன்சனின் மீள்வருகை தென்னாபிரிக்காவுக்கு பலத்தை வழங்குவதுடன், கேஷவ் மஹராஜ்ஜிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாமென்பதும் இத்தொடர் முடிவில் தெளிவாகலாம். டொனோவன் பெரைராவுக்கான வாய்ப்புகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .