Shanmugan Murugavel / 2016 மே 26 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி சார்பில், அத்தொடரில் விளையாடுவதற்கான குழாமைத் தெரிவுசெய்வதற்கான உத்தேசக் குழாமில், அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷெஷாத்துக்கு இடம் வழங்கப்படவில்லை. 22 பேர் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாம், திறன் விருத்திக்காகப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். ஒழுக்காற்றுக் காரணங்களுக்காகவே அவர் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாத ஆரம்பத்தில், பயிற்சி முகாமுக்காக வீரர்கள் அழைக்கப்பட்டபோது, அஹமட் ஷெஷாத், அம்முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே, இந்தக் குழாமிலும் அவர் இடம்பெற்றிருக்கவில்லை.
குறித்த பயிற்சி முகாமில், காயம் காரணமாக இடம்பெறாதிருந்த மொஹமட் ஹபீஸ், யாசீர் ஷா ஆகியோருக்கு, உத்தேசக் குழாமில் இடம் கிடைத்துள்ளது.
குழாம்:
மொஹமட் ஹபீஸ், சமி அஸ்லாம், ஷான் மசூட், குர்றாம் மன்சூர், அஸார் அலி, யுனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், அசத் ஷபீக், இப்திகர் அஹ்மட், ஆசிப் ஸாகிர், அக்பர் உர் ரெஹ்மான், மொஹமட் ஆமிர், றஹாத் அலி, இம்ரான் கான், சொஹைல் கான், ஜுனைட் கான், இஷான் அடில், வஹாப் றியாஸ், யாசீர் ஷா, சுல்பிஹர் பாபர், சப்ராஸ் அஹ்மட், மொஹமட் றிஸ்வான்.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago