Shanmugan Murugavel / 2016 மார்ச் 14 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக இருபதுக்கு-20 தொடரில், கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து அணியைக் கருதுவதாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கல் ஹசி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்காக, இத்தொடரில் ஆலோசராகச் செயற்படும் மைக்கல் ஹசி, இத்தொடரை வெற்றிகொள்ளும் அணிகள் பற்றிய தனது கருத்தை வெளியிட்டார்.
இத்தொடரை வெல்வதற்கான அதிக வாய்ப்புள்ள நாடுகளாக, இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் காணப்படுவதாகத் தெரிவித்த மைக்கல் ஹசி, அவ்விரு அணிகளும் பலமானவையாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார். எனினும், கிண்ணத்தை வெல்லக்கூடிய எதிர்பாராத அணியாக, இங்கிலாந்து அணியைக் கருதுவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், அணியின் பயிற்றுநர் ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோரின் பண்புகளை மைக்கல் ஹசி உயர்வாக மதிப்பிட்டார்.
'அவர்களிருவரும், விடயங்களை அமைதியாகக் கையாளவுள்ளனர். இருபதுக்கு-20 கிரிக்கெட் என்பது, அதிக அழுத்தத்தையும் அதிக கவனத்தையும் அதிக சக்தியையும் கொண்ட விளையாட்டு என்பதோடு, நிலைமை மிகச்சிறப்பாக இருந்தாலோ அல்லது மோசமாக இருந்தாலோ, வழிதடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது" என்றார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'அவர்களால் வெல்ல முடியுமென நிச்சயமாக நான் நினைக்கிறேன். மிக அதிகமான திறமையும் திறனும் இங்கிலாந்துக் குழாமில் காணப்படுகிறது" என்றார்.
4 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago